சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 171)

பிரதான செய்திகள்

நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரணதண்டனை

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட குற்றசாட்டுத் தொடர்பான ...

Read More »

“இந்த வழக்கு உடைச்சு வெளியே வந்தால் உங்களை வெட்டுவேன்” வாகீசம் ஊடகவியலாளருக்கு நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி கொலை அச்சுறுத்தல்

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி வாகீசத்தின் நீதிமன்ற செய்தியாளர் மீது உணவு பொதியினை வீசி தாக்குதல் நடாத்தி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். அது தொடர்பிலான ...

Read More »

சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம்.

சந்தேக நபரான சுமணனை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோவில்லை என முன்னாள் சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார யாழ்.மேல் நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் காவல் துறையினரால் கொள்ளை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ் மேல் ...

Read More »

சம்பந்தன் போன்றோரை வைத்துக் கொண்டு ஈழத்தில் நடைபெறுவதை மூடிமறைக்க சர்வதேச சதி நடக்கிறது – புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் சிறை செல்லமுன் வைகோ குற்றச்சாட்டு

சம்பந்தன் போன்ற ஒரு சிலரை இலங்கை அரசு தன்பக்கம்வைத்துக்கொண்டு ஈழத்தில் நடைபெறுவதை மூடிமறைக்க சர்வதேசத்திலும் ஜெனீவாவிலும் சதி செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பந்தன் போன்றவர்கள் ஈழத்திற்காக குரல் கொடுக்கின்றவர்களையும் குற்றஞ்சாட்டுகின்ற அளவிற்கு நிலைமை படு மோசமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் 15 நாள் காவலில் வைகோவை வைக்க ...

Read More »

காணாமல் போனோர், காணி விடுவிப்பு, பட்டதாரிகள் போராட்டம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்தினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த வடமாகாண முதலமைசர் சி.வி.விக்கினேஸ்வரன் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டம், காணிவிடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனங்கள் வழங்குதல் ஆகிய மூன்று விடையங்களிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்புத் தொடர்பில் முதலமைச்சரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடமாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள ...

Read More »

யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தும் இந்திய மீனவர்கள்…! – 06 பேர் கைது – 162 மில்லியன் பெறுமதியான 13.5 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

யாழ்ப்பாணம் கடற்கரைப்பகுதியில் 6 இந்திய மீனவர்கள் 13.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக காங்கேசந்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(2) அதிகாலை கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் அவர்கள் வசம் மீட்கப்பட்ட 13.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இதன் பெறுமதி 162 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி ...

Read More »

அச்சுவேலி முக்கொலைக்கு மூன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பு !

முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , 2 இலட்சம் அபராதமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014ஆம் ...

Read More »

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது – ரணில்

நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ...

Read More »

படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரிப் போராட்டம்

கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும் விடுவிக்கக்கோரி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (27)கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் விதை உற்பத்திப் பண்ணை வட்டக்கச்சியில் அமைந்துள்ளது. 441 ஏக்கர் பரப்பளவிலான இப்பண்ணையில் போருக்குப் பிறகு 31 ஏக்கர் மாத்திரமே மாகாண விவசாயத்திணைக்களத்தின் நிர்வாகத்தின் ...

Read More »

பயங்கரவாதத்தை ஒழித்த வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்கப்போவதில்லை – தெல்லிப்பளையில் சந்திரிக்கா உரை

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த போவதில்லை என கூறியிருக்கும் நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொறுப்பாகவுள்ளவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்கள் எவ்வாறு காணமல் போனார்கள் என்பதற்கான பதிலையே அவர்களது உறவினர்கள் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க கோரவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். தெல்லிப்பழை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com