சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 200)

பிரதான செய்திகள்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு முப்படையின் பாதுகாப்பு

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான சகல மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கிரீட் உப மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை முப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.  பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய 2016 மார்ச் மாதம் 16 ஆம் திகதி நேற்று காலை 0600 மணி தொடக்கம் பாதுகாப்பு வழங்கும் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு ...

Read More »

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா கேட்டிருக்கின்றார். இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். ...

Read More »

தெஹிவளை வீட்டிலிருந்து நான்கு சடலங்கள் மீட்பு

கொழும்பு தெஹிவளை கவுடானை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் கீழ் மாடியில் இந்த சடலங்கள் காணப் பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு வர்த்தகர், அவரது மனைவி, ...

Read More »

சம்பூரில் 177 ஏக்கர் காணிகள் கையளிக்கும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் பாதுகாப்பு கரணங்களின் நிமித்தம் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து பொதுமக்களுக்கு காணிகளை கையளிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சம்பூரில் நடைபெற இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார். குறித்த நிலப்பகுதியில் மொத்தமாக ...

Read More »

இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? – நிருபா குணசேகரலிங்கம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது. ...

Read More »

யோஷித ராஜபக்ஷவுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது

இலங்கையில் கறுப்பு பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த ஜனவரி 30-ம் திகதி கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், ...

Read More »

6 முனை போட்டி எந்தக் கட்சிக்கு சாதகம்? – மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு

தனித்து போட்டியிடுவது என்ற தேமுதிகவின் முடிவால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு 6 முனை போட்டி ஏற்பட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்? வாக்குகள் பிரிவது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கணிப்பு: ஞாநி (மூத்த பத்திரிகையாளர்) ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது ...

Read More »

நவநாகரீக நிலைப்பாட்டிலிருந்து நாம் சிந்திக்க வேண்டும் – முதலமைச்சரைச் சாடினார் மீள்குடியேற்ற அமைச்சர்

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன   ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு  காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றபோது அங்கு உரைநிகழ்த்தின வடக்கு முதலமைச்சரும் ...

Read More »

தேசிய நல்லிணக்கம் பற்றி முதலில் தென்னிலங்கைக்கு புரியவைக்கவேண்டும் – ஜனாதிபதி

  நாங்கள் தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எல்லோரும் தேசிய நல்லிணக்கம் என்றவுடன் அது பற்றிப் பேச வடக்கிற்கே வருகின்றார்கள். முதலில் நல்லிணக்கம் பற்றி தென்னிலங்கை மக்களிற்கே புரியவைக்கவேண்டும் அது அங்கிருந்தே தொடங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்னிலங்கை மக்களின் மனங்களை சில கடும்போக்குவாதிகள் மாற்ற முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  நாங்கள் சமத்துவமாக எல்லோரும் ...

Read More »

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி உட்பட 700 ஏக்கர் காணி கையளிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றது.  வடக்கு மாகாண ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com