சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / காணாமல் போனோருக்கான நீதி? நிருபா குணசேகரலிங்கம்

காணாமல் போனோருக்கான நீதி? நிருபா குணசேகரலிங்கம்

101காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. எனினும் இப்­பி­ரச்­சினை இது பல­ருக்கு பல­வி­த­மான வடி­வங்­களில் தென்­ப­டு­கின்­றது.
பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ளவில் அவர்­க­ளது உற­வுகள் மீள­வேண்டும், காணாமல் செய்­யப்­பட்­டோரின் நிலை என்ன என்ற கேள்­விகள் கொண்­ட­தாக உள்­ளன. இதனை அண்­மையில் வெளி­யா­கிய சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் அறிக்கை கூட மீளவும் நினை­வு­றுத்­தி­யி­ருந்­தது. இதே­வேளை மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணி­யி­னரைப் பொறுத்­த­ளவில் படை­யி­னரைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்­சி­யினை அர­சாங்கம் செய்­கின்­றது என்ற விச­மப்­பி­ர­சா­ரத்­திற்­கு­ரிய ஒன்­றா­க­வுள்­ளது.
மஹிந்த ஆத­ரவுச் சக்­திகள் காணாமல் போனோர் விட­யத்­தினை தமிழர் சார்ந்த பிரச்­சினை மட்­டுமே என அடை­யா­ளப்­ப­டுத்தி அதன்  ஊடாக எதா­வது ஓர் வகையில் சிங்­கள மக்­களை குழப்பி அர­சியல் லாபம் தேட எத்­த­னிக்கும் கைங்­க­ரி­யத்தில் இறங்­கி­யுள்­ளன.
நடை­மு­றையில் உள்ள அர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­ளவில் இப்பிரச்­சினை சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு உரிய பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. காணாமல் போனோர் பிரச்­சி­னையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது விரு­ம்பியோ விரும்­பா­மலோ சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்­வ­தற்­கான உத்­தி­யாவும் உள்­ளது.
இவ்­வா­றான பல்­வே­று­பட்ட நிலை­மை­க­ளுக்­குள்­ளேயே காணாமல் போனோரைத் தேடி­ய­றியும் அலு­வ­ல­கத்­தினை அமைப்­ப­தற்­கான சட்டமூலம் கடந்த வியாழக்கிழ­மை­யன்று நிறை­வே­றி­யுள்­ளது.
 இச் சட்டமூலம் மஹிந்த சார்பு தரப்­புக்­க­ளினால் பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யேயும் உள்­ளேயும் மேற்­கொள்­ளப்­பட்ட பாரிய எதிர்ப்­புக்­க­ளையும் தாண்டி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. மஹிந்த தரப்பு அணி­யினர் இவ் அலு­வ­லகம் இரா­ணு­வத்­தி­னரைத் தண்­டிப்­ப­தற்­கா­னது, இதன் மூலம் படை­யினர் காட்­டிக்­கொ­டுக்­கப்­ப­டப்­போ­கின்­றனர் என பகி­ரங்­க­மா­கவே பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.
 இதற்கு அர­சாங்கம் இவ் அலு­வ­ல­கத்­திற்கு நீதி­மன்ற அதி­கா­ரமோ அல்­லது தண்­டணை வழங்கும் அதி­கா­ரமோ கிடை­யாது எனத் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக யுத்­தத்தில் ஈடு­பட்ட தலை­வர்­களைப் பாது­காப்­ப­தற்கும் அவர்­க­ளது கௌர­வத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­மா­னது என வெளி­வி­வ­கார அமைச்சர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.
இதன் அடிப்­ப­டையில் இங்கு நோக்­கத்­தக்க விடயம் ஒன்று உள்­ளது. அதா­வது, காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக இடம்பெறும் செயற்­பா­டுகள் படை­யி­னரைக் காட்­டிக்­கொ­டுப்­ப­தற்­கான முயற்சி என பத­வியில் இருந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­பதி அச்சம் கொள்­கின்றார். இதன் மூலம் அவரே படை­யி­ன­ருக்கும் காணாமல் போனோரின் நிலைக்­கு­மான தொடர்­புள்­ள­தென ஏற்­றுக்­கொள்­கின்றார்.
அதி­கா­ரத்­திற்­காக பிர­யத்­த­னப்­படும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான எதி­ர­ணி­யினர்இ சிங்­கள மக்­களை வெல்­வ­தற்­கா­னதும் வாக்­குகள் கவர்­வ­தற்­கா­ன­து­மான பாரிய உத்தி இது எனக் கொண்டே காணாமல் போனோர் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வது படை­யி­னரைக் காட்­டிக்­கொ­டுப்­ப­தற்­கா­னது என்­கின்­றனர்.
பாரா­ளு­மன்றின்னுள் சட்­ட­மூலத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நடை­பெற்ற எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடதுசாரித்­ த­லை­வர்­களில் ஒரு­வ­ரான வாசு­தேவ நாண­யக்­கார தலைமை தாங்­கி­யுள்ளார். பாரிய எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே காணாமல் போனோ­ருக்­கான ஓர் அலு­வ­ல­கத்­தினைத் தாபிப்­ப­தற்­கான முயற்­சி­களைக் கூட மேற்­கொள்ள வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைதான் இன்றும் நாட்டில் காணப்­ப­டுகின்றது. நாட்டில் பாரிய இன­வா­தமும் நீதியைப் பின்­தள்­ளு­தலும் பொறுப்­புக்­கூ­றலில் இருந்து விடு­ப­டு­கின்ற நிலையும் ஒன்றும் குறைந்து போக­வில்லை என்­ப­தற்கு இவை சான்­றாக அமை­கின்­றன
.
காணாமல் போனோர் அலு­வ­லகம் பற்­றிய சட்டமூலம் பற்றி கருத்­து­ரைத்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, உண்மை கண்­ட­றி­யப்­படும் முயற்சி ஒன்­றுக்­காக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார். இது நல்­லி­ணக்­கத்­திற்­கான ஆரம்பம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருப்­பது, நல்­லிணக்க வேளையில் அதற்­காக தமிழ் மக்­களின் நம்­பிக்­கை­யினை அர­சுக்குத் தெரி­விக்கும் சமிக்­ஞை­களில் ஒன்­றா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது.
எனினும் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ளவில் காணாமல் போனோர் அலு­வ­லகம் தன் பணியை நிறை­வு­றுத்தும் வரையில் அது பற்றி பல­த­ரப்­பட்ட சந்­தே­கங்கள் அவர்­க­ளிடம் இன்றும் உள்­ளன. இதுபற்றி அவர்­க­ளிடம் கோரிக்­கை­களும் உள்­ளன
. காணாமல் போன ஆட்­க­ளுக்­கான அலு­வ­லகம் என்­பதை( office of missing persons) என்­பதை கைய­ளிக்­கப்­பட்டு கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைத் தேடி­ய­றியும் அலு­வ­லகம் (office for Families of searching Handed kidnapped and forcible Disappeared) என்று மாற்­று­மாறு நல்­லி­ணக்க செய­ல­ணி­யிடம் வவு­னியா மாவட்ட பிர­ஜைகள் குழுவும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைத் தேடி­ய­றியும் குழுவும் இணைந்து கோரி­யி­ருந்­தன. அவர்கள் காணாமல் போனோர் என்ற வரு­கையில் அது பலாத்­கா­ர­மாகக் காணாமல் போனோர் என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­த­வில்லை எனத் தெரி­வித்­தி­ருந்­தன.
இதற்கு அப்பால் காணாமல் போனோர் அலு­வ­லகம் பற்றி இக் கட்­டு­ரைக்­காக காணாமல் போனோரின் குடும்­பங்­க­ளுடன் பேசும் போது, இவ் அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தில் அவர்­க­ளிடம் சந்­தே­கங்­களும் கவ­லை­களும் உள்­ளன. இவ் அலு­வ­லகம் காணாமல் போனோரின் உற­வு­களை உள்­ள­டக்­காது அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தின் அடிப்­ப­டை­யி­லேயே அங்­கத்­த­வர்­க­ளைக்­கொண்­டுள்­ளது என்ற விமர்­ச­னங்கள் உள்­ளன.
இது அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தற்­கான ஓர் நிறு­வ­ன­மா­கவே வடி­வ­மைக்­கப்­ப­டு­கின்­றது என்ற விமர்­ச­னங்கள் காணாமல் போனோரின் குடும்­பங்­க­ளி­டத்தில் உள்­ளன. காணாமல் போனோர் பிரச்­சி­னை­யினைக் கையில் எடுத்து செயற்­படும் பிர­தி­நி­தி­களை இவ் அலு­வ­ல­கத்­திற்­கான ஆரம்ப கட்ட முயற்­சிகள் உள்­ளன என பாதிக்­கப்­பட்டோர் தெரி­விக்­கின்­றனர்.
 இச் சட்­டத்­தினை உரு­வாக்­கு­வ­திலும் இச் சட்ட ஏற்­பா­டு­களுக்கும் முன்­ன­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே இவ்­வா­றான போக்­குகள்இ இவ் அலு­வ­லகம் முன்­வைக்கும் தீர்­வினைக் காணாமல் போனோரின் விட­யத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற துர்ப்­பாக்­கிய நிலை­யு­டை­ய­தாக அமையக் கூடாது என்­ப­துவே பாதிக்­கப்­பட்­டோரின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது.
காலத்­திற்குக் காலம் காணாமல் போனோர் விட­யத்தில் ஆணைக்­கு­ழுக்­களும் விசா­ர­ணை­களும் கொண்டு வரப்­பட்­டன. இறு­தி­யாக கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களின் பிர­காரம் ஜனா­தி­பதி ஆணைக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது. 2013 ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்ற நீதி­பதி மக்ஸ்வெல் பர­ண­க­மவைத் தலை­வ­ராகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட இக்­கு­ழு­விடம் 19 ஆயி­ரத்­திற்கும் மேலான முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. எனினும் இவ் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட விதங்­களில் பல்­வேறு குறை­பா­டுகள் நில­வின.
 மொழி பெயர்ப்புத் தவ­றுகள், சாட்­சி­யங்கள் படை­யி­னரால் அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­ப­வங்கள், பதில்­களை ஆணைக்­குழு ஏற்­க­னவே தாம் நிர்­ண­யித்து விட்டு உள்­நோக்­கங்­க­ளுடன் கேள்­விகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிடம் கேட்­டமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. இக் குற்­றச்­சா­டுக்­களை மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.
இவ்­வா­றாக நிலை­மைகள் காணப்­படும் போது, இவ்­வாரம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்த முன்னாள் ஜனா­தி­ப­தியும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­வ­ரு­மான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்கா, காணாமல் போனோர் விட­யத்தில் கடந்த கால விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு லேதிக விசா­ர­ணை­களை தொட­ர­மு­டியும் எனக்­கு­றிப்­பிட்­டி­ருந்தார்.
 இவ்­வா­றாக காணாமல் போனோர் விட­யத்தில் கடந்த கால ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ர­ணைகள் முடி­வு­க­ளையும் அடிப்­ப­டை­யாக ஏற்­றுக்­கொண்டு தற்­போ­தைய அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டுகள் அமைந்தால் காணாமல் போனோர் விட­யத்தில் தகுந்த தீர்வு அமை­யுமா என்ற கேள்வி பொதுவில் உள்­ளது?
மேலும் காணாமல் போன­வர்கள் தமது உற­வு­க­ளுக்­காக ஏங்­கு­ப­வர்கள். இவர்­களின் விட­யத்தில் இனி­வ­ருங்­கா­லத்­திலும் தாம­தங்கள் பிர­யோ­கிக்­கப்­படுமாயின் அது மக்­களை மீளவும் பாதிக்கும் விட­ய­மா­கவே அமையும். தாம­திக்­கப்­படும் நீதியை மறுக்­கப்­படும் நீதி என்­பார்கள். அந்த வகையில் தற்­போது அர­சாங்கம் எடுக்­கின்ற நட­வ­டிக்­கை­யா­வது பொருத்­த­மு­டைய நியா­யத்­தினை காணாமல் போனோர் விட­யத்தில் முன்­வைக்க கூடி­ய­தாக அமை­ய­வேண்டும் என்­பதே எதிர்­பார்ப்பு.
காணாமல் போனோரைக் கண்­ட­றியும் அலு­வ­லகம் ஊடாக காணாமல் போனோரை கண்­ட­றி­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் காணாமல் போனோர் சான்­றிதழ் வழங்கல் காணாமல் போனோர் உயிருடன் இருந்தால் உறவுகளுக்கு அறிவித்தல் காணாமல் போனோர் புதைகுழிகள் பற்றி உறுதியான தகவல்கள் காணப்படுமாயின் அதனைத் தோண்டுமாறு நீதிமன்றங்களிடம் விண்ணப்பம் செய்தல் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்கும் தெரி விக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் காணமல் போனோரின் உறவுகள் தமக்கான நீதியைப் பொறுத்தளவில் எவ்வாறான மனப்பான்மையில் உள்ளனர் என்பது பற்றிய தெளிவான வெளிப்படுத்துகைகள் அவசியம்.
இந்த இடத்தில் காணாமல் போனோரின் கருத்துக்களும் பங்கேற்பும் அதிகம் காணா மல் போனோருக்கான அலுவலகத்தினுள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் தொடரப் படவேண்டிய தேவையுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் நாட்டில் வெள்ளை வான்களிலும் ஆயுத முனைகளிலும் கடத்தப்பட்ட தமது உறவுகள் வீடுதிரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே எப்போதும் காத்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டும் உறவினரின் கண்கான சரணடைந்தும் இன்றுவரையில் வீடு திரும்பாதவர்கள் ஆயிரக்கணக்கில் இன்றும் காணாமல் போனோராக உள்ளனர்.
 இவ்வாறாக நிலைமைகள் காணப்படுகையில் சர்வதேசத்தினையும் நடைமுறை அழுத்தங்களையும் சமாளிப்பதற்கான அணுகு முறையாக தற்போதைய அரசாங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான அணுகுமுறைகள் அமையக்கூடாது என்பதுவே சகலரினதும் எதிர்பார்ப்பு.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள்!

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com