சற்று முன்
Home / அறிவியல் / உலகை பீதியாக்கும் வாணாக்ரை (WannaCry) எனும் ரான்சம்வேர் வைரஸ்

உலகை பீதியாக்கும் வாணாக்ரை (WannaCry) எனும் ரான்சம்வேர் வைரஸ்

கடந்த வாரம் உலகின் பல்வேறு நாடுகள் மீது தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Wanna Cry எனும் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரான்சம்வேர் குறித்த கூடுதல் தகவல்கள்

➤உலகில் பெரு நிறுவனங்களின் கணினியில் உள்ள கோப்புகளை ரான்சம் வைரஸ் மூலம் ஹாக்கர்ஸ் செயலிழக்கச் செய்துள்ளனர்.

➤கோப்புகளை பயன்படுத்த வேண்டுமெனில் ஹாக்கர்ஸ் கொடுக்கும் code ஐ விலைக்கு வாங்க வேண்டும் என நிபந்தனை.

➤இதற்கு $ 300 – 600 வரை (ரூ.20,000 முதல் 40,000 வரை) பணத்தை பிட்காயின் மூலம் (மெய்நிகர் பணம்) செலுத்துமாறு நிபந்தனை.

➤பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் போது அது யார் வங்கிக் கணக்கில் சென்று சேர்கிறது என்பதை கண்டறிய முடியாது.

ரான்சம்வேர் வைரஸ் எப்படி உருவானது

➤அமெரிக்காவின் National Security Agency-யால் உருவாக்கப்பட்ட இணையத் தாக்குதல் கருவிகளில் ஒன்று தான் இந்த ரான்சம்வேர்.

➤Shadow Brokers என்னும் ஹேக்கிங் குழு கடந்த மாதம் வெளியிட்ட ரான்சம்வேரை பயன்படுத்தியே தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது.

➤இணையத்தில் ஒரு Link-ஐ க்ளிக் செய்வது அல்லது கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது வைரஸ் உங்கள் கணினிகளை தாக்குகிறது.

➤பல கணினிகள் கொண்ட நெட்ஒர்க்கில் ஒரு கணினி பாதிப்படைந்தால் அது மற்ற கணினிகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்பை தருகிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

➤நீங்கள் Anti virus மென்பொருள் வைத்திருந்தால் உடனே அதை அப்டேட் செய்யவும்

➤மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ள அப்டேட்களை உடனே கணினியில் அமல்படுத்த வேண்டும்

➤மைக்ரோசாப்ட் முன்பு கைவிட்ட விண்டோஸ் XP பதிப்புகளுக்கும் அப்டேட் வெளியிட்டுள்ளது.

➤முடிந்தவரை மின்னஞ்சல்களில் வரும் link க்ளிக் செய்வதை தவிர்க்கவும்.

ரான்சம்வேர் வைரஸ் இந்திய கணினியை தாக்கியதாகத் தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை என இந்திய சைபர் க்ரைம் பாதுகாப்பு பிரிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com