சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 399)

முக்கிய செய்திகள்

வெள்ள அனர்த்தம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜிதசேனாரட்ன இதுதொடர்பாக தெரிவிக்கையில் காணாமற்போனோரின் எண்ணிக்கை 111 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95 என்றும் கூறினார். அமைச்சர் மேலும் ...

Read More »

100 ஆவது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் போராட்டம்

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் தொடர் போராட்டம் நூறாவது நாளை எட்டவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் சர்வமத பிரார்த்தனையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த சர்வமத பிரார்த்தனையின் மூலம் சர்வதேசத்துக்கு இப்பிரச்சினையை மீண்டும் தெரியப்படுத்தி தீர்வினை பெற்றுத்தர கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்தில் தமக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அனைவரையும் ...

Read More »

நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் !

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நியவன்னா ஓயவின் நீர் நாடாளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி ...

Read More »

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த சர்வதேச உதவி கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளிடம் உதவிகோரி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கேற்ப ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அயல் நாடுகளிடம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டல் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான உதவிகளை அரசாங்கம் கோரியுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் இந்த அவசர கோரிக்கையை சர்வதேச நாடுகளிடம் ...

Read More »

ஜனாதிபதி தலைமையில் களுத்துறையில் அவசர கலந்துரையாடல்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசர கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (27)  களுத்துறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உடனேயே ஜனாதிபதி சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்கள் தொடர்பாக தகவல்களை அறிந்து கொண்டதன் பின்னர், ...

Read More »

பொலிஸாரின் விடுமுறைகள் யாவும் இரத்து – விடுமுறையில் உள்ளவர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு

அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை, தணியும் வரை, அனைத்து பொலிஸாரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்திற்க முகம் கொடுத்துள்ள மக்களுக்கு உதவும் வகையில், சுமார் 5,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டல் மற்றும் உத்தரவுக்கமைய, பொலிஸ் ...

Read More »

ஏழு கோடி ரூபா செலவில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்

வல்வெட்டித்துறையின் சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக நீச்சல் தடாகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கென விளையாட்டுத்துறை அமைச்சு ஏழு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிஷ் ...

Read More »

விகாரைக்கு அனுமதியில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

வடக்கில் முன் அனுமதிகள் எவையும் பெறப்படாது தான்தோன்றித்தனமாக விகாரைகளை அமைக்க முடியதொன வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவற்குழியில் அனுமதிகள் பெறப்படாது விகாரை அமைப்பது போன்றே முல்லைத்தீவிலும் அனுமதியில்லாமல் விகாரைகள் அமைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது நாவற்குழியில் ...

Read More »

கிழிந்து தொங்கிய மாகாண சபை – ஊடகவியலாளரால் தலைநிமிர்ந்தது

வடக்கு மாகாண சபையின் கைதடியிலுள்ள வளாகத்தில் நாட்டப்பட்டிருந்த வடக்கு மாகாணக் கொடி கிழந்து போய் பல நாட்களாகத் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. வடக்கு மாகாண சபையின் இன்றைய 93 அமர்விற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இன்று காலை அதனைப் படம்பிடித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். மாலை அமர்வு முடிந்து வெளியில் வந்து பார்த்தபோது மாகாண சபையின் ...

Read More »

தமிழீழ அலங்காரம் – புலி வாகனம் – ஆலய நிர்வாகம் விசாரணைக்கு அழைப்பு !

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது. அம்மனின் புலி வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மன் தானது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com