சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 390)

முக்கிய செய்திகள்

இளைஞர் மீது தாக்குதல் – மானிப்பாயில் சம்பவம்

யாழில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இனுவில் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரே காயமடைந்துள்ளார். மானிப்பாய் ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் இரவு எட்டு மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்துடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த ...

Read More »

பல்கலை மாணவர் படுகொலை –  தகவல்களை மூடிமறைக்க பொலிஸ் அதிகாரிகள் முயற்சி !

யாழ்.பல்கலை மாணவர் கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபர் சம்பவம் நடந்த உடனேயே அது தொடர்பில் தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவ்விடையம் தனது குறிப்புப் புத்தகத்தில் உள்ளது என்றும் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலே பிழையான தகவல்கள் வழங்கப்பட்டன என்ற விவாகாரம் சூடுபிடித்துள்ளது. அது தொடர்பில் நான் கேள்வி ...

Read More »

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மக்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகப் பெரிய துயிலுமில்லமாக தரவை மாவீரர் துயிலுமில்லம் இருந்து வந்தது. இந்நிலையில், குறித்த துயிலுமில்லத்தை யுத்தகாலத்தில் இருந்ததைப் போல் மாற்றியமைப்பதற்காக இச்சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த மைதானத்திலமைக்கப்பட்ட நடுகற்கள் சிறிலங்கா ...

Read More »

விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் !!

  வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாக மாட்டோம் என சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 13ஆது திருத்தச் சட்டத்திலோ மாகாண சபை தேர்தல் சட்டத்திலோ ...

Read More »

வானில் எடுத்துச் செல்லப்பட்ட 80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

வான் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் வரையான பணம், கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று பகல் ராகம – பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காரொன்றில் வந்த கொள்ளையர்கள் வீதியை மறித்து வேனின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் எவருக்கும் ...

Read More »

16 சமூக வலைத்தளங்கள் 10 இணையங்களுக்கு எதிராக சிறிதரன் எம்.பி முறைப்பாடு

தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும் நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மோசமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில், நேற்று (24) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால், முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக, பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read More »

நாட்டில் இன மதவாதத்தை தூண்டி சில குழுக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர் – வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவிப்பு

இந்த நாட்டில் இன மதவாதத்தை தூண்டி சில குழுக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இவர்கள் பேதங்களை உருவாக்கி பிளவுப்படுத்த வைப்பது இவர்கள் காணும் பகல் கனவாகும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நுவரெலியா நகரில் இலங்கை ...

Read More »

ஆயுதம் ஏந்துவோம் – எச்சரிக்கை !

பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதம் ஏந்துவதற்கான சூழ்நிலை உருவாகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலை உருவாகும் என அரசாங்கத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை ...

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தை உடனடியாக நிறுவவும்

காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடனடியாக நிறுவுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. மிக நீண்ட காலமாக இந்த அலுவலகம் அமைக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது. அனைத்து இன சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் இந்த அலுவலகம் நிறுவப்படும் வரையில் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த அலுவலகம் நிறுவப்பட ...

Read More »

பூட்டிய வீட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கையில் பூட்டி இருந்த வீட்டினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குருமன்காடு முதலாம் ஒழுங்கை பகுதியில் நல்லையா சிவராசா (வயது – 73) என்பவரே இன்று (24) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லையா சிவராசா அவரின் மனைவியுடன் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இவரின் மனைவி அவரது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com