சற்று முன்
Home / உலகம் / பதவி விலகுகிறார் டெவிட் கமரூன் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே பதவியேற்கிறார்

பதவி விலகுகிறார் டெவிட் கமரூன் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே பதவியேற்கிறார்

160707190647_theresa_may_home_secretary_640x360_apபிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார்.

மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக தேர்ந்தெடுக்கப்படவேண்டியது தேச நலனுக்கு முக்கியமானது என்று லெட்சம் கூறினார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரிட்டிஷ் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்ததை அடுத்து பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com