சற்று முன்
Home / பிரதான செய்திகள் (page 4)

பிரதான செய்திகள்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் குறித்த அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் இன்று (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரம் அற்ற அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனவரி மாதம் சம்பளம் வழங்குவதில் ...

Read More »

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு: மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, 6 மாதங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் சர்வதேச ...

Read More »

வாள்வெட்டு  சம்பவத்துடன் தொடர்புடையோரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர்பணிப்பு!

இன்று மதியம் சுன்னாகத்தில் வாள்வெட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண உத்தரவிட்டுள்ளார், சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம் பெற்ற வாள்வெட்டு  சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு வடக்கு மாகாண  ...

Read More »

மின்சார பாவனையாளர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஆனந்த பாலித  கைது

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் ...

Read More »

உயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவருக்கு அசிட் வீச்சு தாக்குதல்!

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவி மீது அமிலம் (அசிட்) வீச முற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read More »

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 29 ...

Read More »

இந்த வாரம் கறுப்பு வாரமாக பிரகடனம்!

இந்த வாரத்தை கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தி உள்ளதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கைகளுக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரசாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் வரிக் கொள்கைகளின் தீமைகளை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால், தொழிற்சங்கங்கள் மற்றும் ...

Read More »

கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து பாதிப்பு: ரயில்வே திணைக்களம்

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, ​​கடற்படை முகாமிற்கு முன்பாக ரயில் தடம்புரண்டுள்ளது. அதன்படி தற்போது கரையோர ரயில் பாதையில் ஒரு ...

Read More »

கனடா போன்று மகிந்த, கோட்டா மீது ஜி-7 நாடுகளும் தடைகளை விதிக்க வேண்டும்: மெலனிஜொலி

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி-7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஊக்குவிக்கும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 10ஆம் திகதி இந்த நான்கு பேர் மீதும் கனடா தடைகளை விதித்தது. 1983 முதல் 2009ஆம் ஆண்டு ...

Read More »

யாழ். கோப்பாயில் குடும்பத்தலைவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com