சற்று முன்
Home / செய்திகள் / இந்த வாரம் கறுப்பு வாரமாக பிரகடனம்!

இந்த வாரம் கறுப்பு வாரமாக பிரகடனம்!

இந்த வாரத்தை கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தி உள்ளதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கைகளுக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரசாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் வரிக் கொள்கைகளின் தீமைகளை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து பாரியளவில் எதிர்ப்புப் பிரசாரத்தை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக வைத்தியர்கள், வல்லுநர்கள் மற்றும் பல சங்கங்கள் ஏற்கெனவே போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தற்போதைய வரித் திருத்தங்களை இரத்து செய்து, அனைவருக்கும் நியாயமான வரிக் கொள்கையை முன்வைக்குமாறு சங்கம் அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com