சற்று முன்
Home / செய்திகள் / தீர்வு 2017 இல் கிடைத்தாலும் அதன் அடிப்படைகள் 2016 இலேயே தயாரிக்கப்பட்டுவிட்டன

தீர்வு 2017 இல் கிடைத்தாலும் அதன் அடிப்படைகள் 2016 இலேயே தயாரிக்கப்பட்டுவிட்டன

 

புதிய அரசியல் யாப்பின் மூலமான அரசியல் தீர்வு 2017 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றாலும் அதன் அடிப்படை அம்சங்கள் 2016 இலேயே தயாரிக்கப்பட்டுவிட்டதால் புதிய அரசியல் தீர்வு யாப்பானது 2016 இலே தான் இணங்கி தீர்மானிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டமாக அது இருக்கும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தமிழருக்கு அரசியல் தீர்வுகிடைக்கும் என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  சம்பந்தன் ஆரம்பத்தில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால் 2017 இறுதிக்குள் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீங்கள் உணருகின்றீர்களா என பி.பி.சி ஊடகம் அவரைத் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதில் அளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2016 இற்குள்ளேதான் இந்தத் தீர்வு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 2016 டிசம்பர் 10 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்திருந்தால் அரசியலமைப்புச் சட்டத்திலே இருக்கவேண்டிய அனைத்து விதமாகவும் நடவடிக்கைக் குழுவினதும் உப குழுக்களினதும் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதுதான் முக்கியமானது அதன் பிறகு நடைமுறையிலே என்னென்ன படிமுறைகளை பின்பற்றவேண்டும் எப்படியாக வரையவேண்டும் – எப்படியாக பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படவேண்டும் – எப்படி மக்கள் ஆணை க்காக சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படவேண்டும் என்ற விடையங்கள் நடைபெற்றிருக்கும்.

இடைக்கால அறிக்கை ஒரு சில வாரங்கள் தாமதிக்கின்ற காரணத்தினால்தான் 2016 இற்கு மேலாகச் சென்றிருக்கிறதே தவிர அந்த அறிக்கையிலே இருக்கிற விடையங்கள் அனைத்தும் 2016 இலேயே பேசி முடிவெடுக்கப்பட்ட விடையங்கள். ஆகவே 2017 இலே அது தெரியவந்தாலும் 2017 இலே இது கைகூடினாலும் 2016 இலே தான் இணங்கி தீர்மானிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டமாக அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உபகுழு அறிக்கை வெளிவந்தபோது தமிழ்த் தரப்பிலிருந்து எவரும் குறை கூறவில்லை என குறிப்பிட்ட அவர் அநடத முயற்சி சிறப்பாக கைகூடியிருக்கிறது என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது என்றும் சில தீவிரவாத சக்திகள் கூட, தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கிறவர்கள் கூட அதனை வரவேற்றிருப்பதாகவும் இது தொடர்ச்சியாக நீடிக்குமா என்ற சந்தேகத்தை மட்டுமே எழுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் அமைப்பின் குழுவிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் சுமந்திரனும் வெளியேற வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாக அறிவித்தது தொடர்பில் கேள்ளி எழுப்பியபோது,

சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் கட்சிகள் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்ததாகவும் அவரிடத்தில் அவ்வாறன கருத்து எதுவு அதன்போது வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்த சுமந்திரன் எம்.பி அரசாங்கத்திடம் நடாத்தும் பேச்சுக்கள் தொடர்பில் தங்களிற்கும் தெரியப்படுத்த வேண்டும்என கேட்டிருந்தார். தங்களால் முடிந்தளவு அனைத்தும் அவரிக்கு கூறியிருக்கின்றோம் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com