சற்று முன்
Home / செய்திகள் / ஐஎஸ் அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை

ஐஎஸ் அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை

rajithaஇலங்கையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டோர் இல்லை என்பது பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பபட்டுள்ளதாக சுகாதாரா போஷாக்கு மற்றும் சுதேஷிய வைத்தியத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார் .
ஐஎஸ் அமைப்பில் இலங்கையைச்சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக பாராளுமன்ற கட்டதொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

புலனாய்வுப்பிரிவு இந்த விடயம் தொடர்பாக ஆராய்நது தேசிய பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக இந்த அமைப்பில் எவரும் இணையவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்கள் இதனால் கலக்கமடைந்துள்ளனர். முஸ்லிம் மக்கள் முன்னைய ராஜபக்ஷ ஆட்சி;க்காலத்தில் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தனர். அந்த இருண்ட யுகத்திலிருந்து மீட்சிபெறவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சமகால அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் வாக்குகளை முன்னர் பெற தவறியோர் மீண்டும் அதனை பெறுவதற்கு முயற்சிப்பவர்களே நாடுதளுவிய ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஒருபோதும் முஸ்லிம் மக்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இதற்கு வடக்கில் ஆவா நாவா என்று புதிய விடயங்களை உருவாக்கப்பாக்கின்றது.

சிறுபான்மை மக்கள் இவ்வாறானவர்களை கண்டு ஏமாந்து போக மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இலங்கையிலிருந்து ஐஎஸ் அமைப்பில் 32 பேர் இணைந்துகொண்டிருப்பதாக தெரிவித்தமை அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கூறியிருக்க கூடும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கடும்போக்காளர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருப்பார்களாயின் அ;ந்த மக்களை சார்ந்தவர்களே எமக்கு தகவல்களை வழங்குவர்கள். முஸ்லிம் மக்கள் அமைதியும் சமாதானத்தையும் விரும்புகின்றனர். நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த தர்க்கா நகரில் இதனை நேரில் கண்டுள்ளேன். வடக்கு கிழக்கிலும் அங்குள்ள முஸ்லிம்கள் இந்தவகையில் தீவிரபோக்குடையவர்களுக்கு இடமளிப்பதில்லை என்று தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் சார்பில் தற்போது குரல் எழுப்புவோர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோற்றபாய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய புலனாய்வு பிரிவு உறுப்பினர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com