சற்று முன்
Home / செய்திகள் / வடக்கைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு இலவச தொழிற்பயிற்சி

வடக்கைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு இலவச தொழிற்பயிற்சி

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி ஐநூறு (500), மன்னார் ஐநூறு (500) , முல்லைத்தீவு ஐநூறு (500) , வவுனியா ஐநூறு (500) என வடமாகாணத்தை சேர்ந்த ஐந்து மாவட்டங்களுக்கும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

RPL முறையானது தொழிலில் ஈடுபடும் அனுபவம் பெற்ற அனைவருக்கும் திறனை அங்கீகரிக்கும் சான்றிதழாகும். இம்முறை மூலம் சான்றிதழ் பெறுவதற்கு வயதுக்கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதுடன் தொழில் அனுபவமே போதுமானதாகும். மேலும் தேர்ச்சியை நிரூபிப்பதற்கு தேவையான ஆற்றல் மற்றும் சான்றுகள் மட்டுமே போதுமானதாகும்.

இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய NAITA மாவட்ட தலைமை அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள்
யாழ்ப்பாணம் – 021 2222383 , வவுனியா – 024 2224679 , கிளிநொச்சி – 021 2285615 , மன்னார் – 023 2223404 , முல்லைத்தீவு – 021 2061012

https://we.tl/t-RYziHJuTBd

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com