சற்று முன்
Home / செய்திகள் / வலி வடக்கில் 34 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி வடக்கில் 34 ஏக்கர் காணி விடுவிப்பு

வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் படையினரின் வசமிருந்த இருத்து மேலும் 34 ஏக்கர் நிலம் நாளைய தினம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படவுள்ளது.

வலி. வடக்கில் காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்புக்களை ஆக்கிரமித்து பெரிய இராணுவ முகாம்கள் தற்போதும் கானப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் இராணுவ முகாமில் இருந்து 34 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் பலாலி இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதி நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த 34 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் பட்சத்தில் காங்கேசன்துறை வீதியோரம் இராணுவம் ஆக்கிரமித்த நிலம் விடுவிக்கப்படும் நிலமை காணப்படுகின்றது. ஆயினும் பொலிசாரினால் பெருமளவு நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com