சற்று முன்
Home / செய்திகள் / “தொடை நடுங்கிகள்” என்னை விமர்சிப்பதா ? – சீறிப் பாய்ந்தார் சிவாஜி

“தொடை நடுங்கிகள்” என்னை விமர்சிப்பதா ? – சீறிப் பாய்ந்தார் சிவாஜி

ஜனாதிபதிக்கு எதிரான கறுப்புக்கொடிப் போராட்டத்திற்கு நாங்கள் 09.15 இற்கு வந்துவீட்டோம் நீங்கள் பின்னராக தொடைநடுங்கிவிட்டு வந்துவிட்டு எம்மை விமர்சிப்பதா என  சீறிப் பாய்ந்த வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வருவார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை சந்திப்பார் என்பது தமக்கு முதலே தெரியும் என தற்போது கூறுபவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தின் பின்னர் 18 அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடாத்தி  வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும்,  போராட்டம் நடத்தினோம். ஆளுநருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன

ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை பெற்று தர கோரினோம். நாம் ஆளூநரை சந்தித்ததை பலர் விமர்சித்தார்கள் . ஊடகங்கள் பின் கதவால் சென்றனர் என விமர்சித்தார்கள்.மறுநாள் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானித்த போது , நீதிமன்ற தடை என செய்தி வெளியானது. ஆனாலும் நாம் தடையை மீறி போராட்டம் நடத்த தீர்மானித்து போராட்டம் நடத்தினோம்.

இப்போது ஜனாதிபதியை சந்தித்தது , முன்னேற்பாடு என விமர்சிகின்றனர். ஜனாதிபதியை முதலில் சந்தித்து ,கதைத்தது சுரேஸ்பிரேமசந்திரன் தான் அதன் பின்னர் ஒரு சில நிமிடத்தின் பின்னரே நான் சந்தித்து கதைத்தேன்.தற்போது   ஜனாதிபதி வந்து அந்த இடத்தில் இறங்குவார் என முன்னரே தெரியும் என கஜேந்திரகுமார் சொல்லுறார். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது.

இப்போது சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கதைப்பதை விட்டு ஜனாதிபதி தொடர்பில் கதைக்கலாமே .. என்னை அரசாங்கத்திற்கு துணை போகிறவர் என விமர்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை போல ஜெனிவா செல்லும் போது ,விமானத்தில் சிறப்பு வகுப்புக்களில் பயணிக்க வில்லை . சாதாரண வகுப்புக்களில் தான் பயணிக்கின்றோம்.

மே 18 ஆம் திகதி போர் முடிவடைந்த பின்னர் மே 22ஆம் திகதி இந்தியா சென்றது எதற்காக ? போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவா ? அல்லது இந்தியாவுக்கு துணை போகவா கஜேந்திரகுமார் சென்றார் என்பதற்கு பதில் அளிப்பாரா ?அரசியல் கைதிகளின் போராட்டத்தை வைத்து அரசியல் இலாபம் தேடாதீர்கள். அதனை தாண்டி பொது விவாதத்திற்கு வாருங்கள். உங்களுக்கு சம்பந்தன் , சுமந்திரனை விடுத்து அரசியல் செய்ய முடியாதோ எனக்கு தெரியாது.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் முதலில் களத்தில் நின்றவர்கள் நாங்கள். தொடை நடுங்கி விட்டு நாம் களத்தில் நிற்பதனை அறிந்து பின்னர் போராட்டத்திற்கு வந்த கஜேந்திரகுமார் குழுவினர் அவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றனர்.

சுமந்திரனை இன்றைக்கு விமர்சிக்கின்றனர் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டு கஜேந்திரகுமார் வெளியேறியதால் தான் சுதந்திரன் அரசியல் அரங்கினுள் வந்தார். என்பது உண்மை.என்னை பொறுத்த வரை போராட்டமும் பேச்சுவார்த்தையில் சமாந்தரமாக செல்லட்டும். யார் குத்தினாலும் அரசியானல் சரி.

ஜனாதிபதி வந்து நிற்பார் என தெரிந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்ய வில்லை ? என மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com