சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை மீளப்பெற்றார் சுமந்திரன்

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை மீளப்பெற்றார் சுமந்திரன்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்­கக் கூடாது என்று கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தம் எழு­தி­யமை தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தான் விமர்சித்திருந்த கருத்துக்களை மீளப்பெறுவதாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார்.

கடும் சர்ச்சை­க­ளோடும் வாக்­கு­வா­தங்­க­ளோடும் நேற்று (08) நடை­பெற்­ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்குக் கடி­தம் அனுப்­பிய கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் செயற்பாடு முட்­டாள்­த­ன­மா­னது என்று எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்த கருத்துக்கு, செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் சிவ­சக்தி ஆனந்­தன் ஆகி­யோர் கார­சா­ர­மான பதில் கருத்­துக்­களை கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் தெரி­வித்­த­னர்.

இதன்­போது கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், சுமந்­தி­ரன் அவ்­வாறு தெரி­வித்­தமை தவறு என்று குறிப்­பிட்­டார். இத­னைத் தொடர்ந்து சுமந்­தி­ரன், சம்­பந்­தன் தவறு என்று சொல்­வ­தால், நான் தெரி­வித்த கருத்­துக்­களை மீளப் பெறு­கின்­றேன் என்று தெரி­வித்தார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பிய கடி­தத்தை நான் படித்­துப் பார்த்­துத்­தான் எனது மனச்­சாட்­சிக்கு அமை­வாக கையெ­ழுத்­திட்­டேன். 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து ஜெனி­வா­வுக்கு ஒவ்­வொரு ஆண்­டும் எனது சொந்­தப் பணத்­தில் சென்று வரு­கின்­றேன். அங்கு நடக்­கின்ற விட­யங்­கள் கொஞ்­ச­மா­வது எனக்­குத் தெரி­யும். நான் கையெ­ழுத்­திட்­ட­மைக்­காக என்­னைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப் போகின்­றீர்­களா ? என்ன நட­வ­டிக்கை வேண்­டு­மா­னா­லும் எடுங்­கள் என்று குறிப்­பிட்டார்.

புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த் தன், வழங்­கிய கால அவ­கா­சத்­தில் அரசு எது­வும் செய்­ய­வில்லை. மேல­திக கால அவ­கா­சம் வழங்­கு­வ­தால் செய்­யும் என்ற நம்­பிக்­கை­யும் இல்லை. நாம் கால அவ­கா­சத்­துக்கு ஆத­ர­வ­ளித்து, இலங்கை அரசு செய்­யா­வி­டில் அதற்கு நாம் பொறுப்­பா­ளி­யாக முடி­யாது – என்­றார்.

ஐ.நா. ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பிய அறிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­ட­தா­கச் சொல்­லப்­பட்­ட­வர்­க­ளில் மூவர் கையெ­ழுத்­தி­ட­வில்லை என்று எம்.ஏ.சுமந்­தி­ரன் வெளி­யிட்ட அறிக்கை தொடர்­பி­லும் சர்ச்சை மூண்­டது. கையெ­ழுத்­தி­ட­வில்லை என்று சுமந்­தி­ர­னால் தெரி­விக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோடீஸ்­வ­ர­னைப் பார்த்து செல்­வம் அடைக்­க­ல­நா­தன், ‘நீர் கையெ­ழுத்து வைத்­ததை மறுத்­துள்­ளீரா ?’ என்று கேட்க, அவர் தான் எந்­த­வொரு சந்­தர்­பத்­தி­லும் அப்­ப­டிச் சொல்­ல­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார். இதன்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், நேற்று (நேற்­று­முன்­தி­னம்) வேறு­மா­தி­ரிச் சொன்­னார். இப்­போது வேறு­மா­தி­ரிச் சொல்­கின்­றார் என்று பதி­ல­ளித்தார்.

இந்­தச் சூடான மோத­லின்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், ஐயா (சம்­பந்­தன்) இப்­போது இந்­தக் கூட்டம் கூட்டி கேட்­பதை விட முன்­னரே இது தொடர்­பில் அழைத்­துப் பேசி­யி­ருக்­க­லாமே என்று கேட்­டார். அதற்கு இரா.சம்­பந்­தன், எமது பக்­கம் தவறு நடந்­துள்­ளது.
பத்­தி­ரி­கை­யா­ளர் ஜெனிவா விட­யம் தொடர்­பில் என்ன நிலைப்­பாடு என்று தொடர்ச்­சி­யா­கக் கேட்டு அழுத்­தம் கொடுத்­த­னர். இத­னால் நான் அவ­ச­ரப்­பட்டு விட்­டேன். எங்­க­ளுக்­குள் கருத்து வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் நாங்­கள் ஒற்­று­மை­யா­கச் செயற்­பட வேண்­டும் என்று கூறி சந்­திப்பை முடி­வுக்குக் கொண்டு வந்தார்.

இக் கூட்டத்தில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com