சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 324)

முக்கிய செய்திகள்

திருநெல்வேலிச் சந்தையை எழுந்தமானமாகக் கட்டிவிட்டார்கள் – தமிழ்க் கூட்டமைப்பைச் சாடிய அக் கட்சியின் தவிசாளர்

கடந்த காலத்தில் திருநெல்வேலிச் சந்தையைக் கட்டியவர்கள் ஒரு எழுந்தமானத்தில் கட்டிவிட்டார்கள் தான் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபையின் கடந்த கால ஆட்சியாளர்களை சாடியுள்ள நல்லூர் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரான தியாகமூர்த்தி அதனால்தான் திருநெல்வேலி சந்தை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று (18.04.2018) புதன்கிழமை காலை 10 மணியளவில் ...

Read More »

35 கிலோ கஞ்சாவுடன் சங்குப்பிட்டிப் பாலத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு 35 கிலோ கஞ்சாவினை கடத்த முயன்ற மூவரை கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து பூநகரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டா ரக வாகனத்தில் இன்று(18) அதிகாலை சுமார் 35 கிலோ கிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டோவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கைது ...

Read More »

யாழ் மாநகர முதல்வர் ஆனோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்தித்தார்

யாழ் மாநகர முதல்வர் ஆனோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரேயை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (18) முற்பகல் 10.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது யாழ் மாநகரத்தினை அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மாநகரக அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை ...

Read More »

அன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களால் இன்று (17) காலைசிரமதானம் செய்யப்பட்டது. எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டு. நாவலடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு தூபிக்கு ...

Read More »

யாழ். மீனவரின் வலையில் சிக்கிய ஒன்றரைக் கோடி பெறுமதியான மீன்கள்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு மீன்கள் அகப்பட்டன. குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடியே ...

Read More »

வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடிக்க கூட்டமைப்பை ஆதரித்தது மக்கள் முன்னனி

வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்  ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read More »

சுன்னாகத்தில் வாகன விபத்து மல்லாகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி

யாழில்.இரவு உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த விபத்தில் மல்லாகத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார். இவருடன் கூட சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய ...

Read More »

என்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள் – சி.வி.கே.

“யாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (16) அவர் யாழ்.மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ...

Read More »

வவுனியா வெங்கள செட்டிக்குள பிரதேச சபை சிறிரெலோ வசமாகியது

வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக சுதந்திர கட்சியில் போட்டியிட்ட சிறீரெலொ கட்சியினை சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோணி அவர்கள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசு கட்சியினை சேர்ந்த சுப்பையா ஜெகதீஸ்வரன் மற்றும் சுதந்திர கட்சியின் ஆசீர்வாதம் அந்தோணி அவர்கட்கும் இடையில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் அந்தோணிக்கு 07 வாக்குகளும் ஜெகதீஸ்வரன் அவர்கட்கு ...

Read More »

ஜ.தே.க, ஈ.பிடி.பி, சுதந்திரக்கட்சி, ஆதரவுடன் வவுனியா நகரசபையைக் கைப்பற்றியது ஈ.பி.ஆர்.எல்.எவ்

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுன ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த  கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார். வவுனியா நகரசபைக்கான சபை அமர்வு இன்று (16) காலை இடம்பெற்றது. இதன்போது  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com