சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 12)

முக்கிய செய்திகள்

யாழ். கொக்குவிலில் புலிகளின் ஆயுதங்கள் அகழ்வு பணிகள் மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை  அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை  அகழ்வு செய்யும் பணி நாளை திங்கட்கிழமை காலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட ...

Read More »

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் அவர்கள் தாக்கப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் ...

Read More »

ஜனவரி 17ம் திகதி நள்ளிரவுடன் A/L வகுப்புகளுக்கு தடை!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை கட்டுப்படுத்த சட்டம்!

இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ...

Read More »

யாழில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கனான ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கனான கடற்தொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) எனும் மீனவரே உயிரிழந்துள்ளார்.  கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த வேளை ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அதனை ...

Read More »

8 இலட்சம் முட்டைகள் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளது

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை ...

Read More »

வாயாடல்களால் அல்லது விமர்சனங்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது: சஜித்

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையானவேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை கிடைத்தபாடில்லை எனவும், நம்பிக்கையீனமே இதற்கு காரணமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய குழு ஐக்கிய மக்கள் ...

Read More »

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு!

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார். இதையடுத்து, குழப்பமாக சூழல் ஏற்பட்டது. உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் ...

Read More »

பணத்தை அச்சிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதலாவது நாடாக இலங்கை: ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தில் பணத்தை அச்சிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதலாவது நாடாக இலங்கை இருக்கும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டம் தெரணியகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ...

Read More »

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.01.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கவேலாயுதபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com