சற்று முன்
Home / செய்திகள் / அன்டனோ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலி உறுப்பினர் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை

அன்டனோ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலி உறுப்பினர் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை

இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 ஆண்டுகளில் சிறையில் அனுபவிக்க முடியும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகிய இருவருக்கே 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுபலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த படையினர் 37 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு எதிராக ஏவுகணையைச் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டு உள்பட 37 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தமது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் நிராகரித்திருந்தனர்.
உண்மை விளம்பல் விசாரணைகளின் பின்னர் எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் கட்டளையிட்டிருந்தார்.

எனினும் அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். அந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பை வழங்கினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com