சற்று முன்
Home / செய்திகள் / சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு ?

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு ?

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அமைச்சரவையின் நிதியமச்சராக ரவிகருணாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதிலளித்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அரசுடன் கூட்டமைப்பு இணையாதெனவும் தெரிவித்ததுடன் தொடர்ந்து எதிர்கட்சியாகவே செயற்படுமெனவும் தெரிவித்தார்.

எனினும் சுமந்திரன் அமைச்சராக பொறுப்பேற்காத போதும் அத்தகைய அந்தஸ்துடன் அரசில் ஆதிக்கம் செலுத்துவாரென அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை முன்னரும் ஐதேகவினால் சுமந்திரனுக்கு நிழல் வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com