சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் (page 8)

அரசியல் கட்டுரைகள்

இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? – நிருபா குணசேகரலிங்கம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது. ...

Read More »

அரசியலமைப்பு மாற்றங்கள் – சில ஊகங்களும், சில கேள்விகளும் – நிலாந்தன்

தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்~வை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்~வே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, ...

Read More »

தாழ்ந்துவரும் தமிழ்ப் பேரம்பேசும் சக்தி? – நிலாந்தன்

விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கிய போது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்ட காலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்ற ஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்~வின் ஆட்சிக்காலத்தில் ...

Read More »

“பேரறிவாளனை விடுதலை செய்தால்… தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!”

பிப்ரவரி இறுதிக்குள், தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்று செய்திகள் வருகின்றன. அதற்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று ...

Read More »

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் – நிலாந்தன்

அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா?  என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே ...

Read More »

தேசியப் பொங்கல் விழா? – நிலாந்தன்

அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் ...

Read More »

2016 : தீர்வு கிடைக்குமா? – நிலாந்தன்

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் வழங்கிய ஓர் ஆணையாகவும் எடுத்துக்கொள்ளலாமா?; ஆயின் ...

Read More »

தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்? – நிலாந்தன்

சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன்.  தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது  ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான்  விக்கினேஸ்வரன்  கட்சிக்கு  வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார்.   சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும்  சம்மந்தர் பேசாமல் இருந்தார்.  விக்கினேஸ்வரனை  வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார்.  எனினும்  கடந்த மாதம் ...

Read More »

காணி நிலம் வேண்டும் – நிலாந்தன்

இம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்; ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால்  ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான  ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது. ...

Read More »

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு! – நிலாந்தன்

இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் ;சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது.  தமிழ் மக்களைப் பொறுத்தவரை  இம்மாற்றங்களில் அதிகமானவை  மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு  மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக  தென்னிலங்கையில்  மனித ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com