ஐப்பசி 02 வெளியாகிறது மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம்

14258081_570715543121652_311581521173035641_oசினிமா வரலாற்றில் யாழ்ப்பாணத்தின் பிரமாண்ட படைப்பாக உருவாகிவரும்  திரைப்படமான “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” முழு நீளத்திரைப்படம் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் ராஜா2 திரையரங்கில் சிறப்பு VIP காட்சிகள் மற்றும் சாதாரண காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ஒரு பிரபலமான தமிழ் விநியோக நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ் வகையில்  18 க்கு மேற்பட்ட வெளிநாடுகளில்மனசுக்குள் ஒரு மழைச்சாரல் சிறப்புக்காட்சி காண்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் எமது சிறப்புக்காட்சிகள் காண்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..
இன்னும் 48 மணி நேரத்தில் திரைப்படத்துக்கான டிக்கற்றுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com