எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக இருக்கும்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்
மாற்றத்துக்கான களமாக உள்ளது.
பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கான பணச் செலவீட்டை பார்த்தாலே இந்த மாற்றத்தை பார்க்கலாம். எமது கட்சியில் நான் தனிப்பட்ட ரீதியில் மிகவும் குறைவான தொகையையே செலவிட்டேன். பலரும் கோடிக்கணக்கில் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வென்ற 22 பேரே இன்று 22 தரப்பாக பிளவடைந்துள்ளனர். போனஸ் ஆசனம் தவிர ஐந்து கட்சிகளுக்கு ஐந்து ஆசனம் செல்லும் நிலையே காணப்படுகிறது.

தேசியம் பற்றி மட்டுமே கதைப் வர்கள். பெண்கள் மற்றும் பொருளாதாரம் யாரும். பேசுவதில்லை. பெண் பிரதிநிதி வேண்டும் என்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 4 ம் இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் - என்றார்.

Share on Google Plus

About vakeesam

வாகீசம் - தூயவை துணிவோம் - உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் தமிழ் செய்தித் தளம்

0 Post a Comment:

Post a Comment