வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் இன்று (21.03.2023) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.ஸ்தலத்தில் தந்தை மரணமடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவவிபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




