சற்று முன்
Home / செய்திகள் / கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பெண் தாதி ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்!

கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பெண் தாதி ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கடமைக்காகச் சென்ற போது விபத்து
மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியையே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com