சற்று முன்
Home / சினிமா / அஜித், விஜய் பின்னுக்கு தள்ளியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்…

அஜித், விஜய் பின்னுக்கு தள்ளியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி வாகையை சூடி விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெறுகிறது.

குறிப்பாக அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இப்படியான நிலையில் திண்டுக்கல் ஏரியாவில் அஜித், விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ஆமாம், திண்டுக்கல் ஏரியாவில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை விக்ரம் திரைப்படம் பிடிக்க இரண்டாம் இடத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் பிடித்துள்ளது.

டான் திரைப்படத்திற்கு பின்னரே அஜித்தின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் பிடித்துள்ளது. இந்த தகவல் சமகால இடங்களில் வைரலாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com