சற்று முன்
Home / இந்தியா / உல­கில் பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை: மோடி

உல­கில் பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை: மோடி

உல­கில் அமைதி, நல்­லி­ணக்­கம், பாது­காப்பு நில­வு­வதை உறுதி செய்ய ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வதே இந்­தத் தரு­ணத்­தின் தேவை என ஜி20 மாநாட்­டில் பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

புத்­த­ரும் காந்­தி­யும் பிறந்த மண்­ணில் அடுத்த ஆண்டு அனை­வ­ரும் ஜி20 மாநாட்­டிற்­காக கூடும்­போது உல­கிற்கு அமை­திக்­கான தக­வலை இன்­னும் அழுத்­த­மாக கடத்த முடி­யும் என தாம் நம்­பு­வ­தாக மாநாட்­டில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னில் அமைதி திரும்ப போர் நிறுத்­த­மும் பேச்­சு­வார்த்­தை­யும்­தான் தீர்வு என்­றும் இரண்­டாம் உல­கப்­போர் கால தலை­வர்­கள் போல் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து அதற்­கான வழியை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

“அந்த பொறுப்பு நம் தோள்­களில்­தான் உள்­ளது. இந்த உல­கம் முழு­வ­தும் இணைந்து அதற்­கான வழியை அமைக்க வேண்­டும். இதை நான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றேன்.

“கடந்த நூற்­றாண்­டில் இரண்­டாம் உல­கப் போர் பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. அப்­போ­தைய உலகத் தலை­வர்­கள் அமைதி திரும்ப முயற்­சி­களை முன்­னெடுத்­த­னர். இப்­போது இது நமது நேரம். நமக்­கான வாய்ப்பு,” என்­றார் பிரதமர் மோடி.

சுத்­த­மான எரி­சக்தி, சுத்­த­மான சுற்­றுச்­சூ­ழல் தேவை என்­ப­தில் இந்­தியா உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்­தி­யா­வின் எரி­சக்தி பாது­காப்பு உலக வளர்ச்­சிக்கு முக்­கி­யம் என்­றார். ஏனெ­னில் இந்­தியா இப்­போது வேக­மாக வள­ரும் பொரு­ளி­ய­லைக் கொண்­டுள்­ளது என பிர­த­மர் மோடி சுட்­டிக்­காட்டி­னார்.

“எனவே, இந்­தி­யா­வுக்கு எரி­சக்தி கிடைப்­ப­தைத் தடுக்­கும், அதற்­கான நிலைத்­தன்­மைக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் எவ்­வித தடை­க­ளை­யும் ஊக்­கு­விக்­கக் கூடாது,” என்­றார் பிர­த­மர் மோடி.

பிர­த­மர் மோடியை தேடிச்­சென்று கைகுலுக்­கிய அதி­பர் பைடன் இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று நடை­பெற்ற ஜி20 மாநாட்­டின்­போது, அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், இந்­தி­யப் பிர­த­மர் மோடியை நோக்­கிச் சென்று கைகு­லுக்­கி­னார்.

அமெ­ரிக்க அதி­பர் தம்மை நோக்கி வரு­வதை முத­லில் கவனிக்­காத இந்­தி­யப் பிர­த­மர், பிறகு சுதா­ரித்­துக்கொண்டு அதி­பர் பைட­னு­டன் கைகு­லுக்கி, அவரை அர­வ­ணைத்­தார். இது தொடர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. முன்­ன­தாக மாநாட்டு அரங்­கில் தலை­வர்­க­ளுக்கு வரி­சை­யாக இருக்­கை­கள் போடப்­பட்­டி­ருந்­தன.

தனக்­கான இருக்­கை­யில் அம­ரச் சென்ற அமெ­ரிக்க அதி­பர், இந்­தி­யப் பிர­த­ம­ரைக் கண்­ட­தும் தாமே முன்­சென்று கைகு­லுக்­கி­னார். பின்­னர் பிர­த­மர் மோடி ஏதோ சொல்ல, அதைக் கேட்­டுச் சிரித்த அதி­பர் பைடன், பிறகு தமது இருக்­கைக்­குச் சென்று அமர்ந்­தார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com