சற்று முன்
Home / Uncategorized / பல நன்மைகள் தரும் வேர்கடலைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உண்ணலாம் தெரியுமா?

பல நன்மைகள் தரும் வேர்கடலைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உண்ணலாம் தெரியுமா?

பொதுவாக வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும். இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.

இதனை சாப்பிடுவது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது .அந்தவகையில் வேர்க்கடலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நன்மைகள்

வேர்க்கடலைகள் இயற்கையாகவே இதயத்திற்கு நன்மை கொடுக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. 

வேர்க்கடலை  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் இன்சுலின் சுழற்சியை ஊக்குவிக்கும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலின் செல்களுக்குள் செலுத்தி அதனை சக்தியாக மாற்ற உதவுகிறது.

வேர்க்கடலைகளில் நிறைந்துள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலம் ஆகியவை உடலுக்கு மற்றும் ரத்த நாளங்களுக்கு நன்மை கொடுக்கக் கூடியது. இதன் மூலம் தமனிகளிலும் ரத்தநாளங்களிலும் குறைபாடுகள் ஏற்படாமலும் தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் வேர்க்கடலை பாதுகாக்கிறது. 

வேர்க்கடலையில் ஆலிவ் ஆயிலில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து அவற்றை பாதுகாப்பாகவும், வலிமையுடனும் மாற்ற உதவுகிறது.

வேர்க்கடலையில் இதில் உள்ள குறிப்பிட்ட அளவிலான புரதமும், வைட்டமின் இ- யும் ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.

நார்சத்துக்களும், புரதமும் இரண்டையும் கொண்டுள்ள வேர்க்கடலைகள் உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகிறது. 

அதிகமாக உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

அதிகம் உட்கொள்ளும் போது இது உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு பலவித செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சிலருக்கு இயற்கையாகவே வேர்க்கடலை உண்பதால் ஒவ்வாமை ஏற்படும்.

உதாரணத்திற்கு மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூச்சுப் விடுவதில் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுவதை கண்டறிந்தால் நீங்கள் வேர்க்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு வேர்கடலைகள் உண்ணலாம்?
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 42 கிராம் வேர்க்கடலைகள் உண்பது சரியான அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 16 வேர்க்கடலைகள் என்ற விகிதத்தில் உள்ளது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com