இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,816 பேர் பலியாகியுள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின.
இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையில் இதுவரை 1,816 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.