யாழில் ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

கடந்த நாட்களில் சந்தை கொத்தணிகளில் பலர் தொற்றாளர்களாக அடையாம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று (மார்ச்-25) யாழ் மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தையின் ஒரு பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்டிருந்த மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் 677 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு யாழ் மாவட்டத்தில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.