
இலங்கைக்குள் மேலும் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 457 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 8 ஆயிரத்து 706 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.