Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஹோமாகமவில் ரி-56 ரக துப்பாக்கிகள் 12களுடன் ஒருவர் கைது

பாதாள உலகக்குழுக்களின் பயன்பாட்டில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம- பிடிபன பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினராக தற்போது சிறையிலுள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com