வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் புதிய அரசியல் பாதையை அறிவிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் முதலமைச்சர் அழைத்துவரப்பட்டார்.
மத தலைவர்களின் ஆசி செய்திகளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் களுள் ஒருவரான வசந்த குமார் (கிழக்கு மாகாணம்), யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கு.குருபரன், வைத்தியகலாநிதி பூ.லக்ஸ்மன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
தொடந்து உரை நிகழ்த்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது புதிய அரசியல் பிரவேசம் குறித்த தகவல்களை மக்கள் முன் அறிவித்தார். அதன்போது மக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
தான் புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பிக்கப்போவதாகவும் அது தமிழ் மக்கள் கூட்டணியாக செயற்படும் என்றும் அவர் உரையாற்றினார்.