என்னடாப்பா NEPL இற்கு வந்த சோதனை !

வணக்கமுங்கோ,

தெற்காசியாவில் இரண்டாவது பிரமாண்டமான வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்குடன் (NEPL) இணைந்து நைசா நிறுவனமான தாங்களே நடாத்துவதாகவும் போட்டியின் ஒரு அணியின் உரிமையாளர்கள் என்பதைத் தவிர ஐ…………பீச்சி அதுதானுங்கோ அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்களுக்கும் குறித்த சுற்றுப்பேட்டிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அண்மையில் ஊடகத் தம்பிமாரை திண்ணைக்கு அழைச்சு சாப்பாடு எல்லாம் போட்டு அறிவிச்சவயுங்கோ.

அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்கள் நடத்துவதாக வெளித் தெரிவதலால்தான் “தெற்காசியாவில் இரண்டாவது பிரமாண்டமான வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியாக இருந்தும் உந்தப் போட்டியில் யாழ்ப்பாணத்தில இருக்கிற பேப்பர்காறங்களும் ஏன் மக்களும் கூட ஆர்வம் காட்டவில்லை என்றும் கவலைப்பட்டவயுங்கோ. அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்கள தாங்கள் எச்சரித்தவ எண்டும் இனியும் அவயள் தங்கண்ட போட்டி எண்டு கொடி பிடிச்சா அவைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போதாக எல்லாம் சொன்னவயுங்கோ.

உந்தக் கதையள நம்பி எங்கண்ட தம்பிமாரும் அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்கள் உண்மைகளை ஒழிச்சு பொய்களை காட்டுது எண்டு நல்ல காட்டுக் காட்டினவயுங்கோ. இப்ப என்னடா எண்டு பார்த்தால் மீண்டும் குறித்த போட்டியினை தாங்களே நடத்துவதாக அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்கள் தொடர்ச்சியாக கூவிக்கொண்டு திரியீனுமுங்கோ.

உப்பிடித்தானுங்கோ நோபோல் பிறிண்டர் எண்ட நிறுவனம் தாங்கள் கஸ்ரப்பட்டு கட்டின கடுதாசிக் கொம்பனிக்கு நிதி நெருக்கடி வந்த நேரத்தில விழுந்தடிச்சு தாங்கள் பங்குக்கு காசு தாறம் எண்டு சொல்லிப்போட்டு உள்ள நுளைஞ்சு அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற கூட்டுத்தாபன ஆக்கள் இப்ப நோபோள் எண்டுற பேரை ஒழிச்சு மறைச்சுப்போட்டு தாங்கள் தான் வடக்கின் இரண்டாவது கடுதாசிக் கொம்மனிய திறக்கப்போறம் எண்டு கூவிக்கொண்டு திரியீனுமுங்கோ.

இப்பிடிக் கனக்கா திருவிழா நடக்குதுங்கோ யாழ்ப்பாணத்தில.
திருவிழா எண்டேக்கதான் ஞாபகம் வரூதுங்கோ. அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு மறைக்கிற ஆக்கள் இனப்படுகொலை இராணுவம் எண்டு ஒருபக்கம் கூவிக்கொண்டு மறுபக்கமா அந்த ஆமியிட்ட எல்லீடி ரீவி வாங்கி அந்த ஆமியக்கொண்டு நல்லூர் திருவிழாவியயும் ஏதோ பிரமாண்டம் காட்டப்போயீனுமாமுங்கோ. உவயளின்ர உந்த டீலுங்குகளை என்னெண்டு சொல்லுறதெண்டு தெரியேல்லயுங்கோ.

போற போக்கில உவயள் அனைத்துலகத்திலையும் தமிழை ஒழிச்சு அழிச்சிடுவீனும்போலதான் கிடக்குங்கோ

அப்ப நான் போட்டுவாறனுங்கோ
(வண்டில்காற) வைரவி அப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com