பெண்கள் குறுகிய காலத்திற்குள் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட இது தொடர்பான முற்றுகையின் போது கைப்பற்றப்பட்ட மூன்று வகையான கிறீம்கள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கையும் பெற்றுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைவாக இந்த கிறீம்களில் அடங்கியுள்ள இரசாயனத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவிலும் பார்க்க அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலிக்கா பியூட்டி கிறீம் கோல்டன் லைஃப் பியூட்டி கிறீன். பின்ஸ் பப்பாயா அன்ட் அலோவேரா மற்றும் நுஹா-வையிட் பியிட்டி கிறீம் ஆகிய கிறீம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.