சற்று முன்
Home / மருத்துவம் / உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா ? என்ன செய்வீர்கள் !!

உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா ? என்ன செய்வீர்கள் !!

உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும். ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.

அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரிசெய்வதற்கான இலகுவான வழிமுறைகள்

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம். அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம். அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம் என கூறப்படுகின்றது.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், சமிப்பாடு தொடர்பான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும். ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் வழங்கும்.

அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும். தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் சரியாகிவிடும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இந்தப் பானம் அருந்தினால் தொப்பை கரையும் உடல் எடை குறையும்

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க தினமும் மிக கஷ்டமான உடல் பயிற்சிகள் மற்றும் மிக ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com