சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (மே 03) எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்களான
அமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) ஆகியோர் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
இன்று (03.05.2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் றக்காவீதி, ஆர்ட் கலரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நினைவுகூரல் நிகழ்வில்
இரு ஊடகவியளலாளர்களது உருவப்படங்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து காமினி நவரட்ண பற்றிய புரிதல் எனும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் திரு.ஜ.சாந்தன், காமினி நவரட்ணவின் காலம் எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் திரு.ந.பரமேஸ்வரன், ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர் எனும் தலைப்பில் பேராசிரியர் .இ.சிவச்சந்திரன் (ஓய்வுநிலை –யாழ்.பல்கலைக்கழகம்)
ஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மொழியியல்துறை, சிரேஸ்ட விரிவுரையாளர், திரு.விமல்சுவாமிநாதன், ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
அதன் பின்னராக ஆபிஆர்எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்லாட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ்.ஊடக அமையம் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
(படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்)