சற்று முன்
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை 75% அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிப்பதற்கு CEBக்கு PUCSL அனுமதி வழங்கியது.

Read More »

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்?

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.இந்நிலையில் எதிர்காலத்தில் விலை குறையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Read More »

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில்,சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான ...

Read More »

பொது போக்குவரத்து வாகனம் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்காக வழங்கும் எரிபொருள் அளவில் மாற்றம்?

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. இன்று(08) காலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபை (CTB) மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான  எரிபொருள் ...

Read More »

நாடளாவிய ரீதியில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு IOC க்கு அனுமதி

இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக LIOC முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Read More »

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read More »

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது படைப்பிரிவுடன் ஜனாதிபதி செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ...

Read More »

QR கோட்டா முறை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் அமுல்ப்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு ...

Read More »

குரங்கம்மை தொற்றை கண்டறியும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்

குரங்கு அம்மை நோய் தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை  முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவ தொழிநுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி  சகோதரமொழி  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். பொரளை மருத்துவ ஆராச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் ...

Read More »

பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு

நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலையைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com