சற்று முன்
Home / உலகம்

உலகம்

அமெரிக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் 10 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக ...

Read More »

பங்களாதேஷின் எரிபொருள் விலைகள் பாரிய அளவில் திடீர் அதிகரிப்பு

பங்களாதேஷின் எரிபொருள் விலைகள் 1971 இல் அந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு எரிபொருள் விலையை 51.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இது இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப் படுகிறது. மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் அமைச்சகத்தின் விலை அறிவிப்பின்படி, ஒரு ...

Read More »

Bangkok தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

Bangkokன் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் மூன்று மணித்தியாலத்தின் பின்னரே தீயணைப்பு வீரர்களினால் தீயை கட்டப்பாட்டக்குள் கொண்டுவர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவல் தொடர்பில் Bangkok பொலிஸார் மேலதிக விசாரணைகளை ...

Read More »

ஹெலிகொப்டர் விசிறி தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு – கிறீஸ் நாட்டில் சம்பவம்

ஹெலிகொப்டர் பின்புற விசிறி தாக்கியதால், உல்லாசப் பயணியான ஓர் இளைஞன் தலைதுண்டிக்கப்பட்டு உயிரிழந்தசம்பவம் கிறீஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனைச் சேரந்த ஜோன் பென்டொன் எனும் 21 வயது இளைஞரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஜோன் பென்டொன், தனது குடும்பத்தினருடன் கிறீஸுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். இவர்கள் மைகோனோஸ் எனும் சுற்றுலா தலத்திலிருந்து, தலைநகர் ஏதென்ஸுக்கு ஹெலிகொப்டரில் திரும்பி வந்தனர். ...

Read More »

டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த எலான் மஸ்க்

சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். ஒப்புக்கொண்ட விதிகளை மீறிய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More »

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

பிரிட்டன் பிரதமர் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தனது பதவியையும் கட்சி தலைவர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார். கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகின்றேன் ஆனால் புதிய பிரதமரை கட்சி தெரிவு செய்யும் வரை பதவியில்நீடிப்பேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் தலைசிறந்த பணியை விட்டுக்கொடுப்பது குறித்து கவலையடைகின்றேன் எனதெரிவித்துள்ள அவர் ...

Read More »

லிபிய பாராளுமன்றுக்கு மக்கள் தீ வைப்பு

லிபியாவின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், டோப்ரூப் நகரிலுள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராக பெரும்பாலான லிபிய நகரங்களில் பேரணிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. 2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவு ...

Read More »

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் – 950 பேருக்கு மேல் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 950 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சம்பவத்தில் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது ...

Read More »

அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் – 19 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்ப பாடசாலைமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் துப்பாக்கி பிரயோகம் வழமைக்கு ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com