
வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இவர்களின் 09 வயது மற்றும் 03 வயதுடைய பிள்ளைகள் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.