சற்று முன்
Home / செய்திகள் / வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்ட ராஜபக்ஷகள்: தகவலறியும் சட்டம் மூலம்

வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்ட ராஜபக்ஷகள்: தகவலறியும் சட்டம் மூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தகவலறியும் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த வருடம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு 2 வெளிநாட்டு விஜயங்களுக்கு 36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 3 வெளிநாட்டு விஜயங்களுக்கு சுமார் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com