பிரான்ஸில் கொரோனா தொற்றுக்கு பின்னர் மக்கள் மத்தியில் புது விதமான பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு முன்பு இருந்ததனை விடவும் தீவிரமான சோம்பேறித்தனம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரான்ஸின் பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, 11ஆம் திகதி வெளியாகிய அறிக்கைக்கமைய, தொற்றுநோய்க்குப் பிறகு, பிரான்ஸ் மக்கள் தீவிரமான சோம்பேறிகளாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு முன்னர் இருந்ததனைவிடவும் 30 சதவீதமே சுறுசுறுப்பாக இயங்குவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இளைஞர்களிடையே அதிகமாக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

25 முதல் 34 வயதுடையவர்களில் 40 சதவீதம் பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 சதவீதமானவர்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இருந்ததனை விடவும் மிகவும் சோம்பேரித்தமாக செயற்படுவதாக தெரியவந்துள்ளது. பாரிஸ் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா முடக்கத்தின் போது வாழ்க்கை நிலைமைகள் சுமையாக இருந்ததாகவும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் 41 சதவீதம் பேர் முன்பை விட குறைவான ஊக்கத்துடனேயே இருப்பதாகவும் இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வகையான குளிர்ச்சியான நிலைமையை உணர்கின்றோம். இந்த நிலைமை அதிகம் இயங்க வைக்காது. எந்த வேலையையும் செய்யும் எண்ணம் இல்லை. எல்லாவற்றிற்கும் சோம்பேறியாகவே உணர்கின்றோம்.

செய்ய வேலை ஒன்றும் இல்லாததனை போன்று உள்ளோம் என்பதனை போன்ற உணர்வே உள்ளதென இந்த சோம்பல் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் உள்ள அன்றாட செயற்பாடுகளை செய்ய முடியாத நிலை, வீட்டில் உள்ள இயந்திரங்களை இயக்க சோம்பல், துப்பறவு செய்வதற்கு சோம்பல், விரும்பி சமைக்கல் சோம்பல் என பல பிரச்சினைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
இந்த நிலைமை நீடிக்கப்பதற்கு முன்னர் மக்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆய்வு நடத்திய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.