சற்று முன்
Home / செய்திகள் / கோதுமை மாவை ஏற்றி வந்த லொறியொன்று விபத்து

கோதுமை மாவை ஏற்றி வந்த லொறியொன்று விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் கோதுமை மாவை ஏற்றிவந்த லொறி ஒன்று நேற்றீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான லொறியில் பயணம் செய்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com