காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் புதிய உத்தரவை பிறப்பித்து அவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.