சற்று முன்
Home / சினிமா / பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கேப்ரில்லா பங்கேற்றுள்ள நிலையில் தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கடந்தவாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்றும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்து போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் செட் முழுவதும் சானிடைசர் செய்யப்படுவதாகவும் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தலைமுடி கொட்டுகிறது என்ற கவலையை விட்டுத்தள்ளுங்கள்

அவுரி அல்லது நீலி என்னும் செடி தாவரவியலில் என்று அழைக்கப்படுகின்றது. அவுரி ஒரு மருத்துவ மூலிகையாகவும் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com