சற்று முன்
Home / செய்திகள் / வடக்கை மிரட்டும் கொரோனா! மேலும் 28 பேருக்கு தொற்று!

வடக்கை மிரட்டும் கொரோனா! மேலும் 28 பேருக்கு தொற்று!

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுக்குள்ளான 28 பேர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில்,

வவுனியா வைத்தியசாலைக்குச் சென்றவர்களில் நால்வர், அவர்களில் மூவர் வெளிநாடு செல்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெறச் சென்றவர்கள், ஒருவர் நோய் அறிகுறியுடன் சென்றவர்.

செட்டிகுளம் வைத்தியசாலைக்கு நோய் அறிகுறிகளுடன் சென்ற இருவர்,

கிளிநொச்சியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோய் அறிகுறியுடன் சென்ற ஒருவர்,

யாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த ஐவர்,

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த மூவர்,

காரைநகர் அரச பேருந்து சேவை (டிப்போ) – இருவர்,

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நால்வர், இருவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட மார்சலின் மனைவி, பிள்ளை, யாழ்.நகரில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர், யாழ்.நகரில் உள்ள கருவாட்டுக்கடை ஒன்றின் வியாபாரி ஒருவர்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவர் அவர்களில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட சிற்றூழியர் ஒருவர், கோண்டாவில் அரச பேருந்து சேவை (டிப்போ) பணியாளர் ஒருவர், அரச பேருந்து சாரதி பயிற்சிக்கல்லூரிப் பணியாளர் ஒருவர்

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவர், அவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட இலங்கை வங்கி ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள்

தகவல் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com