களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலைமையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களனி, கொலன்னாவ, தொம்பே, கடுவலை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் வௌ்ள அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடும் மழை காரணமாக, களுகங்கை, ஜின்கங்கை, அத்தனகல ஓயா ஆகிய ஆறுகள் பெருக்கெடுக்கும் மட்டத்தை அண்மித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.