சற்று முன்
Home / பல்சுவை / வீட்டில் எப்பொருளை எங்கு வைத்தால் செல்வம் நிலைக்கும் !!

வீட்டில் எப்பொருளை எங்கு வைத்தால் செல்வம் நிலைக்கும் !!

வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும்.

கடிகாரம் :

நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது.வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி :

வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.

வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.
அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.

7 குதிரைகள் கொண்ட ஓவியம் :

பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது.இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.

மணி ப்ளாண்ட் :

இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் :

பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.

இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ட்ரெண்டாகும் #90sKidsRumors பள்ளிக்கால வதந்திகளை மீட்டும் இனிய தருணங்கள்

நவீன உலகில் அன்றாடம் ஏதோ ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com