சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 5)

முக்கிய செய்திகள்

மஹிந்த நாளை பிரதமராக பதவியேற்பு!!

புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்வ நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியவில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ச முன்னிலையில் நாளை காலை களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது. குறித்த பிரதேசத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ...

Read More »

பாராளுமன்ற உறுப்பினராகிறார் முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 14 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் விவரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சாஹர காரியவசம், அஜித் நிவாட் ஹப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ...

Read More »

கைகள், கால்கள் கட்டப்பட்டு முகம் கறுப்புத் துணியால் முடப்பட்டது மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் ...

Read More »

முன்னணியில் தேசியப்பட்டியல் ஆசனம் கிழக்கிற்கு ?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின் தேவையென குரல்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் கட்சியின் யாழ்ப்பாண மைய அரசியல் நீக்கத்துக்கான தூரநோக்கான செயற்பாடாக அமையும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ...

Read More »

3 வாக்களர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 03 வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள வைத்தியசாலையாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொழுநோய் வைத்தியசாலையாகும். தொழுநோய் ...

Read More »

ஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை

தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையிலுள்ள ஒவ்வொரு தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள் எந்தெந்த தினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், 5,10,11,12,13 தரங்களில் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க ...

Read More »

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர், 5000 ரூபாயை கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற சந்தர்ப்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பாடுகளை ...

Read More »

புதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற அமர்வு ...

Read More »

தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் ...

Read More »

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com