சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் (page 3)

அரசியல் கட்டுரைகள்

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன? – நிலாந்தன்

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ...

Read More »

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்

இரண்டு தரப்பிற்கும் நோகாமல் வடமாகாண சபை விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரன் தனது நீதியையும், பதவியையும் தக்கவைத்துக் கொண்டார். சம்பந்தர் தமிழரசுக்கட்சியை பாதுகாத்துக் கொண்டார். பதவி கவிழ்க்கப்பட்டால் அடுத்தது என்ன என்பது தொடர்பில் விக்னேஸ்வரனிடம் துணிகரமான தரிசனம் எதுவும் இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. தன்னை சந்தித்த மதகுருக்கள் சிலரிடம் தான் யாழ்ப்பாணத்தில் நிற்கத் துணிந்து விட்டதாக கூறியுள்ளார். ...

Read More »

ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி? அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? – நிலாந்தன்

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அது தோல்வி. முன்னெடுத்தாலும் அது தோல்விதான். நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் அவர்கள் வென்றாலும் அது தோல்விதான். தோற்றாலும் அது ...

Read More »

மே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? – நிலாந்தன்

  காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மே தின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு நல்ல செய்தி வரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற்; தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் ...

Read More »

முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை – நிலாந்தன்

கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கிய பொழுது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்தித்தார்கள். சாகும் வரையிலுமான உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். திலீபன், அன்னை ...

Read More »

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்;பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது படித்துப்பட்டம் பெற்று ...

Read More »

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடம்பெற்ற ...

Read More »

வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? – நிலாந்தன்

இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப் ...

Read More »

கேப்பாப்பிலவு : நந்திக்கடல் மௌனமாக அழுதது – நிலாந்தன்

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த ...

Read More »

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

“பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com