சற்று முன்
Home / இந்தியா (page 3)

இந்தியா

நடிகர் கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா ? வீட்டின் முன் ஒட்டப்பட்ட பிரசுரம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது. நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் ...

Read More »

ராஜஸ்தானில் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு.

ராஜஸ்தானில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழந்தமைக்கு நச்சு உணவே காரணம் எனத் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாம்பார் ஏரி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக இது விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பறவை இனப் பெருக்கத்துக்காக வந்து செல்லும். இந்நிலையில் அந்தப் பகுதியில் ...

Read More »

நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக ...

Read More »

கஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி, துணை இராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் கூட அவர் ...

Read More »

தி.மு.கவிற்கு தமிழிசை எச்சரிக்கை.

நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்டால் தி.மு.க. தனிமைப்படுத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் மூலம் தமிழகத்தை மத்திய ...

Read More »

தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதி பட்டதாரியா இருக்கவேண்டும் – அதிரடி காட்டும் கமலின் மக்கள் நீதி மையம்

21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். சென்னை ஜி.ஆர்.டி. கிராண்ட் நட்சத்திர விடுதியில், இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்துக்கு கமல்ஹாசன் வரும்போதே, ‘வருங்கால முதல்வர் நம்மவர்’ என்கிற கோஷம் அதிர்ந்தது. ...

Read More »

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு – ஏழு காட்டங்களாக நடைபெற ஏற்பாடு – தமிழகத்திற்கு ஏப்ரல் 18 இல்

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மே 19ஆம் திகதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று(10)உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ல் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ...

Read More »

கமலுக்கு “ ரோர்ச் லைற்” கொடுத்த தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி ரோர்ச் லைற்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி, விருப்பமனுக்கள், பரப்புரைகள் என தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து, தொகுதி பங்கீடையும் ...

Read More »

மோடி ஒரு பச்சைப் பொய்யன் – பிரகாஸ்ராஜ் சாடல்

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் – “இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் ...

Read More »

வன்மங்கள் நிறைந்த நீட் தேர்வு சர்ச்சைகள்

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர். வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com